Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில், திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைப்படி, 63 பேர் சமுதாயஞ்சார் சீர்திருத்தக் கட்டளைக்குட்பட்டுள்ளார்கள் என, திருகோணமலை பிராந்திய சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் எம்.எச்.முபாரக் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறு குற்றங்களுக்கு வழங்கப்படுகின்ற சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் அல்லது ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைகளுக்குப் பதிலாக வழங்கப்படுகின்ற தண்டனையே, சமுதாய சீர்திருத்த கட்டளையாகும்.
“திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தின் பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, சமுதாய சீர்திருத்த பணியில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றார். சமூகத்தில் தவறானவர்கள் திருந்தி வாழ்வதற்கு சந்தர்ப்பங்களை வழங்கும் நோக்கில் இவ்வாறான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன.
“கஞ்சா, கசிப்பு, கோடா, ஹெரோய்ன், சூது, களவு, மதுபாவனை மூலம் பொது இடங்களில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டவர்களையும் சீர்திருத்தும் நோக்கில், இவ்வாறான கட்டளைகள் வழங்கப்படுகின்றன.
“இக்கட்டளையின் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களையும் குற்றச்செயல்களில் ஈடுபடத் தூண்டுபவர்களையும் திருத்தும் நோக்கில் தனிப்பட்ட உளவள ஆலோசனை, குழு உளவள ஆலோசனை, மருத்துவ உளவள ஆலோசனை, ஆன்மீகப் பயிற்சிகள், தொழில் பயிற்சி வழிகாட்டல்கள், சமூகப் பணிகளில் ஈடுபடத்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 minute ago
38 minute ago
58 minute ago