Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஜூன் 11 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் சேவை உள்ளீர்ப்பு, அவர்களின் பதவியுயர்வுகள், சம்பள மாற்றியமைப்புக்கள் மற்றும் அசிரியர்களின் வருடாந்த சம்பள உயர்வு சம்மந்தமான விடயங்களை துரிதப்படுத்துவதற்கு கிண்ணியா வலயக் கல்வி அலுவலம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது சம்பந்தமாக வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசூகர்கான் நேற்று கிண்ணியா வலய சகல அதிபர்களுக்கும் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தங்கள் பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் மேற்படி விடயங்களை இதுவரை செய்து முடிக்காதிருப்பின், அவ்வாறானவர்கள் சம்மந்தமான விபரங்களை உடனடியாக வலயக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
5 hours ago