அப்துல்சலாம் யாசீம் / 2017 செப்டெம்பர் 22 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
விசேட காணி மத்தியஸ்த சபைகள் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் அதனோடு தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட செயலமர்வொன்று இடம்பெறவுள்ளது என்று, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் தாபித்திருக்கின்ற காணிப் பிணக்குகளைத் தீர்த்துவைப்பதற்கான மத்தியசபைகளின் நடவடிக்கைகள் தொடர்பிலேயே விளக்கமளிக்கப்படவுள்ளதாகவும் எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.00 மணி முதல் 10.30 மணிவரை திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதில், மத்திய ஆணைக்குழு உயர் அதிகாரிகள் காலந்துகொள்வதுடன், திருகோணமலை மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் விசேட காணி மத்தியஸ்த சபை அங்கத்தவர்களுக்கு இச்செயலமர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், பிரதேச செயலாளர்கள் உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .