Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
அநுராதபுரம்-கெப்பித்திக்கொல்லாவ கல்வி வலயத்துக்குட்பட்ட வீரச்சோலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கடந்த மே மாதம் முதல் அதிபர் இல்லாத நிலையில் இயங்கி வருகின்றமையால் மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த பாடசாலையில் கடமையாற்றி வந்த அதிபர் மற்றும் உப அதிபர் ஆகியோரை ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரானுடன் தெடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கடந்த மே மாதம் கைது செய்யப் பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள நிலையில், அப் பாடசாலைக்கு புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்படாமையினால் அப்பாடசாலையின் அதிபர் பதவி வெற்றிடமாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதே நிலையில் மூன்று மாதங்களாக அதிபர் அற்ற நிலையில் குறித்த பாடசாலை இயங்கி வருவதால் கற்றலில் ஈடுபடுகின்ற மாணவர்களின் பெற்றோர்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.
அதிபர் அற்ற நிலையில் காணப்படும் இப்பாடசாலையின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு இதற்கான தீர்வை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பெற்றுத் தரவேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .