2025 மே 14, புதன்கிழமை

அதிபர் மீது ஆசிரியர் தாக்குதல்

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா வலயத்துக்கு உட்பட்ட காக்காமுனை  தி /கிண்/தாருல் உலூம் மகா வித்தியாலய பாடசாலை அதிபரை அப்பாடசாலை ஆசிரியர்  ஒருவர் தாக்கிய சம்பவத்தை கண்டித்து நேற்று (22) காலை  மாணவர்கள் , பெற்றோர் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில்   ஈடுபட்டனர். 

பாடசாலை ஆசிரியரை தாக்கியது மட்டுமல்லாமல் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாகவும் தெரிவித்து குறித்த ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாணவர்களுக்கு அறிவையும், ஒழுக்கத்தையும் புகட்டும் ஆசிரியர்கள் இவ்வாறான செயலை செய்வது இழிவான செயல் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு எந்தவொரு உயரதிகாரிகளும் வருகைத்தராமையினால் பிரதான வீதிக்கு சென்று பெற்றோர், மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கிண்ணியா பொலிஸ் நிலைய பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர், அவ்விடத்திற்கு வருகைத்தந்த கிண்ணியா வலய கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கூறியதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X