2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடித்த இருவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூன் 15 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, குச்சவெளி கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இருவரை, நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரவு கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த குச்சவெளிப் பொலிஸார், மீன்பிடிப்பதற்காகப் பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் குச்சவெளி, ஜாயாநகர் பகுதியைச் சேர்ந்த தாசீம் இப்ராஹீம்  
(24 வயது) மற்றும் எம். அஸ்லம் (23 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இரண்டு பேரையும், குச்சவெளி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X