2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றியவருக்கு பொலிஸ் பிணை

Princiya Dixci   / 2016 ஜூன் 16 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

கந்தளாய் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெண்ராசன்புர குளத்தில் அனுமதிபத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மண் ஏற்றிய உழவு இயந்திர சாரதியை, நேற்றுப் புதன்கிழமை (15) மாலை கைதுசெய்த கந்தளாய் பொலிஸார், அவரைப் பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், கந்தளாய் வௌசிறிகம பகுதியைச் சேர்ந்த 30 வயது நபராவார். இவரை இன்று (16) கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X