Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவுக்கும் இடையிலான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் விசேட கலந்துரையாடல், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் இன்று (07) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், பிரித்தானியாவில் நல்லிணக்கம் எவ்வாறு நடை முறையில் உள்ளது பற்றிய அனுபவங்களையும் அவர்களுடைய செயற்பாடுகள் சம்பந்தமாகவும் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
அத்துடன், கிழக்கு மாகாண கல்வித் துறையில் காணப்படுகின்ற குறைபாடுகளையும் அதனை எவ்வாறு தீர்ப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், விவசாயம், மீள்குடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் அகதிகளை இலங்கைக்கு வரவழைத்து, அவர்களுக்குறிய தேவைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக், கே.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண சபை அமைச்சர்களானஆரியவத்தி கலப்பத்தி, எஸ்.தண்டாயுதபாணி, கே.துரைராஜசிங்கம் மற்றும் கிழக்கு மாகாண உறுப்பினர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
43 minute ago