2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்றவருக்கு மறியல்

எப். முபாரக்   / 2017 ஜூலை 22 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச் சென்ற நபரொருவரை, இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க உத்தரவிட்டார்.

கந்தளாய், ரஜஏல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபர் கந்தளாயிலிருந்து ரஜஎல பகுதிக்கு டிப்பர் வாகனத்தில் மணலை ஏற்றிக்கொண்டு சென்ற போது, கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,  புதன்கிழமை (19) மாலை கைதுசெய்யப்பட்டாரென பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X