Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 18 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், அப்துல்சலாம் யாசீம்
முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா உள்ளிட்ட ஆடைகளின் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை, இந்த அரசாங்கம் பெற்றத்தர வேண்டுமென்று, கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிண்ணியா நகரசபையின் 17ஆவது அமர்வு, நேற்று (17) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், பல்லினச் சமூகம் வாழும் இந்நாட்டிலே, ஆடை அணிவதற்கான சுதந்திரம் என்பது சட்டத்தால் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருந்தாலும், ஆங்காங்கு சில கசப்பான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
சட்டமானது, சுற்றறிக்கை, வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாகக் காலத்துக்குக் காலம் தெளிவுபடுத்தப்பட்டு வந்தாலும், அதனை அறிந்திராத அல்லது தவறான புரிதல்களைக் கொண்ட சில அரச அதிகாரிகள், பாடசாலைகள், பரீட்சை மண்டபங்கள், வைத்தியசாலைகள் போன்ற இடங்களில் வேண்டுமென்றே ஏற்படுத்துகின்ற இன்னல்களுக்கு, முஸ்லிம் மாணவிகளும் பெண்களும் ஆளாகின்றனரென்றும் அவர் கூறினார்.
எனவே, இனிமேலும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாதவாறு, சம்ந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் உரிய முறையில் அறிவிப்பதன் மூலம், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, முஸ்லிம்கள் கலாசார ரீதியான ஆடையணிவதில் இருக்கின்ற பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமென, அரசாங்கத்தை அவர் கேட்டுக்கொண்டார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago