Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Yuganthini / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
மூதூர் ஆதார வைத்தியசாலைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்தியட்சகர் டொக்டர் அம்கஸ் பிரான்சிஸ், மூதூர் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரை, அவரது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார் .
இக்கலந்துரையாடலில், கடந்த காலத்தில் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள், எதிர்காலத்தில் நிறைவேற்றப்படவேண்டிய பல்வேறுபட்ட புதிய அபிவிருத்தி விடயம் குறித்து எடுத்துக்கூறப்பட்டன.
இதனைக் கேட்டறிந்த புதிய வைத்திய அத்தியட்சகர், எதிர்காலத்தில் இவற்றை நிறைவேற்றித்தருவதற்கான உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வதாகவும் வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
04 Jul 2025