Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எம்.ஏ.பரீத் / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், நாளை மறுதினம் (24) கிண்ணியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்கிறார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாடு, கிண்ணியா நகர சபை மைதானத்தில் நாளை மாலை 03 மணிக்கு நடைபெறவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் துறைமுகங்கள், கப்பற்றுறை பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா தெரிவித்தார்.
கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் திருகோணமலை மாவட்டத்தை உள்ளடக்கிய பல ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் பங்கேற்கவுள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .