Editorial / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 94ஆம் கட்டைப் பகுதியில், அம்பியூலன்ஸும் வானொன்றும் மோதியதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில், கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
1990 அம்பியூலன்ஸுல் நோயாளியொருவரை, கந்தளாய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது, திருகோணமலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த வானொன்று மோதி, நேற்று (16) இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் அம்பியூலன்ஸுல் பயணித்த சாரதி, உதவியாளர், நோயாளி, நோயாளியின் பாதுகாவலர் ஆகிய நால்வரும் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன், வானில் பயணித்த இருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்து 06 பேரும், தற்போது கந்தளாய் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், விபத்து தொடர்பில் கந்தளாய் தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
52 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
59 minute ago