Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மே 08 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், கீத், ஹஸ்பர் ஏ ஹலீம்
அரச ஊழியர்களின் வயிற்றிலடிப்பதை, அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டுமென, திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
ஊடகங்களுக்குஊடகங்களுக்கு கருத்துரைத்து அவர் கூறியதாவது, “அரச ஊழியர்களுள் பெரும்பாலானவர்கள் அவர்களது சம்பளத்தில் குடும்பத்தைப் பராமரிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருபவர்கள். பெறுகின்ற சம்பளத்தை விட அதிக செலவுகளுக்கு முகங்கொடுப்பதால் அவர்களது மாதாந்த பட்ஜெட் துண்டு விழுந்து கொண்டே வருகின்றது.
“இந்நிலையில், நாட்டு நலன் கருதி, கடந்த மாதம் எல்லா அரச ஊழியர்களும் தமது ஒரு நாள் ஊதியத்தை அரசுக்கு நன்கொடையாக வழங்கினார்கள். இது அரச ஊழியர்கள் செய்த பெருந்தியாகம். இந்த தியாகத்தை அரசாங்கம் பலவீனமாக நினைக்கக் கூடாது.
“தொடர்ந்து அரச ஊழியர்களின் சம்பளத்தில் கைவைக்கும் மனோநிலையை அரசாங்கம் மாற்ற வேண்டும். கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருந்தால், அரச ஊழியர்கள் படும் கஷ்டங்களைப் புரிந்துகொள்ள முடியாமல்தான் இருக்கும். அரச ஊழியர்கள் மட்டத்துக்கு இறங்கி அவர்கள் படும் கஷ்டத்தை உணர்ந்து சில முடிவுகளை எடுக்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
18 minute ago
40 minute ago