Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
வடமலை ராஜ்குமார் / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 06:00 - 1 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் சாதகமாக பரிசீலிக்குமாறு கோரி, திருகோணமலையைத் தலமாக கொண்டு இயங்கும் இந்து மத அமைப்பான தென் கையிலை ஆதீனம், ஐனாதிபதி மைத்திரிபால சிறிசெனவுக்கு, கடிதமொன்றை இன்று (23) அனுப்பி வைத்துள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த சில வாரங்களாக அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் இளைஞர்களின் கோரிக்கை தொடர்பாக, தங்களது மேலான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகின்றோம்.
அவர்களுக்கான வழக்கு விசாரணையை அவர்கள் விளங்கிக்கொள்ளக் கூடியவாறு, தமிழ் மொழியிலான ஆற்றுப்படுத்தலுடன் மேற்கொள்ளும் போது, வழக்கு சம்பந்தமான தெளிவும் வழக்கின் அகப்புறச் சூழ்நிலையின் புரிதலும் அவர்களுக்கு ஏற்படும்.
அத்துடன், தமக்காக தமிழ் சட்டத்தரணிகளை வைத்து வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியுமென நம்புகிறார்கள்.
அவர்களது கோரிக்கையிலுள்ள உணர்வு ரீதியிலான நியாயத்தை தாங்கள் கவனத்தில்கொண்டு, விசாரணையை வவுனியாவில் நடத்த ஆவண செய்யுமாறு தமிழ் மக்கள் சார்பில் தங்களை வேண்டிக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
க.ஜெயகாந்தராஜா Tuesday, 24 October 2017 05:32 AM
சாமி நல்ல முயற்சி உங்கள் இதுபோன்ற பணி தொடரவேண்டும்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago