2026 மார்ச் 23, திங்கட்கிழமை

அலைபேசி ஒலித்ததால் ரூ.500 அபராதம்

Kogilavani   / 2016 ஜனவரி 01 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

வழக்கு விசாரணையொன்றின் போது அலைபேசி ஒலித்ததால் நபரொருவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமொன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (31) இடம்பெற்றது.

பதுளை, சார்ணியா பெருந்தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆனந்தராஜா என்பவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

நேற்று (31) காலை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, மேற்படி நபரின் அலைபேசி ஒலித்துள்ளது. அலைபேசியை நிறுத்தி வைக்காது நீதிமன்றத்துக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் மேற்படி நபரை அங்கு கடமையிலிருந்த
பொலிஸார்; கைதுசெய்து நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது அந்நபரை கடுமையாக எச்சரித்த நீதவான் ருவந்திகா மாரசிங்க, 500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .