2026 மார்ச் 23, திங்கட்கிழமை

அலையால் அடித்துச்செல்லப்பட்டவரை தேடும் பணி

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 06 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, நிலாவெளிக் கடலில் இன்று புதன்கிழமை நீராடிக்கொண்டிருந்த ஒருவர் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

தென்னிலங்கையிலிருந்து சுற்றுலா வந்த ஒரு குழுவினர் கடலில் நீராடிக்கொண்டிருந்ததாகவும் இதன்போது மூன்று பேரை அலை அடித்துச் சென்றுள்ளது. இவர்களில் இருவரைக் காப்பாற்றியதாக திருகோணமலை உயிர் காக்கும் பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.

காணமால் போனவரைத் தேடும் பணி தொடர்கின்றது. சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதினால், தேடுவதில் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .