2026 மார்ச் 23, திங்கட்கிழமை

அலுவலக கூட்டத்திலிருந்து உத்தியோகத்தர்கள் வெளிநடப்பு

Sudharshini   / 2016 ஜனவரி 02 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலவலகத்தில் பணியாற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் குடும்ப நல உத்தியோத்தர்களும் அலவலக கூட்டத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (01) மதியம் வெளிநடப்பு செய்தனர். 

புதுவருடத்தின் முதல் வேலை நாளின்போது சுகாதார வைத்திய அதிகாரியினால் உத்தியோகத்தர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதன்போது, உத்தியோகத்தர் ஒருவர் தமக்குள்ள பிரச்சினை பற்றி சுகாதார வைத்திய அதிகாரியிடம் கூற முற்பட்ட போது, ' இந்த அலுவலனத்தில் பணியாற்றும் உமது பிரச்சினைகளை இங்கு தெரிவிக்க முடியாது. உடனடியாக வெளியே சொல்லவும்'  என வைத்திய அதிகாரி பணித்தார்.

இதனையடுத்து, அலவலகர்கள் அனைவரும் உடனடியாக கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர். மேலும், 'சுகாதார வைத்திய அதிகாரி தங்களிடம் பணிவாக உரையாற்றும் வரை தாம் கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என தெரிவித்தனர்.

இது குறித்து சுகாதார வைத்திய அதிகாரியிடம் வினவியபோது, 'ஊடகங்களுக்கு இங்கு வேலை இல்லை. நீங்கள் வெளியேறலாம்' எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .