2025 ஜூலை 31, வியாழக்கிழமை

அல்-ஹாபிழ்களுக்கு அழைப்பு

Niroshini   / 2016 ஜூலை 02 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக், பதுர்தீன் சியானா, தீசான் அஹமட்

கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அல்-ஹாபிழ்களை (அல்-குர்ஆன் மனனம் செய்தவர்கள்)  ஒன்றிணைக்கும் பெரும் பணியை கிழக்கு முதல்வர் ஏற்படுத்தியிருக்கிறார்.

இதன் மூலம் ஹாபிழ்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பிரயோசனமான பெரும் நிகழ்வுகள், கருத்தரங்குகள் என்பன இடம்பெறவிருக்கின்றன.

எனவே, விரைவில் அதற்கான விண்ணப்பப் படிவங்கள் கிழக்கின்  மூன்று மாவட்டங்களிலும் விநியோகிக்கப்படவுள்ளன.  அதனைப் பெற்று அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே, கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் இருக்கும் ஹாபிழ்கள் உங்கள் பெயர் விபரங்களை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முதல் media.eastcmShgmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு 077-1276680 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .