2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அல்கைதாவின் யுத்தப் பயிற்சிகள் அடங்கிய இறுவட்டுகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 மே 20 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம் 

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பபான அல்கைதாவின் யுத்தப் பயிற்சிகள் தொடர்பான இறுவட்டு ஒன்றை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை, திருகோணமலை ஜமாலியா பிரதேசத்தில் வைத்து, பொலிஸார் இன்று (20) கைதுசெய்துள்ளனர்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த இப்ராஹீம் ஷா மஹ்ரூப் (55வயது) என்பவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது,  அல் கைதாஇயக்கத்தின் யுத்தப் பயிற்சிகள் அடங்கிய இறுவட்டுகள் இரண்டு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை திருகோணமலை நீதவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .