Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன்ஆனந்தம்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக்கல்லூரியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக கல்வி நடவடிக்கைள் பாதிக்கப்பட்டிருப்பதாக பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
890 மாணவர்கள் வரை கல்வி பயிலும் இக்கல்லூரியில் இருந்து அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்ட எட்டு அசிரியர்களுக்கான பதிலுட்டு நியமனம் பெற்றவர்கள் கடமைக்கு சமுகமளிக்கவில்லை.
இந்நிலையில் 42 ஆசிரியர்கள் தேவைக்கு 24 ஆசிரியர்கள் மட்டுமே கற்பித்து வருகின்றனர். இதனால் எழச்சி பெற்று வந்த இக்கல்லூரியின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டிருப்பதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மாகாணக் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் மாகாணப் பணிப்பாளர் போன்றவர்களின் கவனத்துக்குத் தாம் கொண்டு வந்திருப்பதாகவும் மிக விரையில் வழங்கப்படவுள்ள நியமனத்தில் இப்பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்தப்பிரச்சனைக்கு தற்காலிகத் தீர்வாக கல்லூரியின் பழைய மாணவர்கள் சிலரைப் பயன்படுத்துவதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கின்றது.
வெருகல் பிரிவில் 245 பேருக்கு 140 ஆசிரியர்களே கடமையில் இருப்பதாக அண்மையில் பிரதேச செயலாளர் எம். தயாபரன் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
56 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago