2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு

Editorial   / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், வடமலை ராஜ்குமார்

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென, கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீணாக்கேணி பகுதியில் எஹட் கரிதாஸ் அமைப்பால் அமைத்துக் கொடுக்கப்பட்ட 51 நிரந்தர வீடுகளை, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நேற்று (23) திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வீடுகள் ஒவ்வொன்றும் தலா 5 இலட்சத்து 25,000 ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

“கிழக்கு மாகாண கல்வி மேம்பாட்டுக்காக புதிய திட்டங்களை வகுத்துள்ளேன். அந்த வகையில், கிழக்கு மாகாணத்தில் 1,500 பட்டதாரி ஆசிரியர்களை விரைவில் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதோடு, பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களிடமும் தரவுகளைப் பெற்று, ஆசிரியர் வெற்றிடம் நிலவுகின்ற பாடசாலைகளின் குறைகள் நிவர்த்தி செய்யவுள்ளேன்” என்றார்.

திருகோணமலை எஹட் கரிதாஸ் பணிப்பாளர் அருட்தந்தை நிதிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதீதியாக சுவிஸ் தூதுவர் வெல்கர் நடக்கோன் , விசேட அதீதிகளாக கரிதாஸ் அமைப்பின் தேசிய பணிப்பாளர் மகேந்திர குணத்திலக்க, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார, மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசூப் ஆகியோர்  கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X