Princiya Dixci / 2016 மார்ச் 10 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, நிலாவெளிப் பிரதேசத்தில் மூன்று ஆடுகளைத் திருடி விற்பனை செய்த நபரொருவரை, எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஹயான் மீ ஹககே, நேற்று புதன்கிழமை (09) உத்தரவிட்டார்.
ஆராம் கட்டை,பெரியகுளம் நிலாவெளிப் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நிலாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சந்தேகநபர் நீண்ட காலமாக ஆடுகளைத் திருடி வேறு பிரதேசங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்து வருவதாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேகநபரை செவ்வாய்க்கிழமை (8) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்த மூன்று ஆடுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபரை, பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய விசாரணைகளை நிலாவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago