எப். முபாரக் / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நான்காம் கட்டை பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையொன்றின் விகாராதிபதியைத் தாக்கி, அவரின் ஆடைகளைத் திருடிச் சென்ற மூவரை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார்.
திருகோணமலை, சீனக்குடா, நான்காம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 34, 24, 27 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும், மேற்படி விகாராதிபதியைத் தாக்கி விட்டு, அவரின் அறைக்குச் சென்று ஆடைகள் மற்றும் இதரப் பொருட்களையும் திருடிச் சென்றதாக பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
22 minute ago
29 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
29 minute ago
48 minute ago