Princiya Dixci / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தேசிய உற்பத்தி அபிவிருத்தி அமைச்சினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிறந்த பிரதேச செயலகத் தெரிவில், 2014- 2015ஆம் ஆண்டின் சிறந்த பிரதேச செயலகமாக குச்சவெளி பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 313.37 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் இரண்டாவது பெரிய பிரதேசமாக குச்சவெளி பிரதேசம் காணப்படுகின்றது. கடந்த 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்றதனால் இங்கு வாழும் மக்கள், பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2012 - 2013ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இதே போட்டியில் இலங்கையின் இரண்டாவது சிறந்த பிரதேச செயலகமாக குச்சவெளி பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
7R எனும் முறைமையை அடிப்படையாகக் கொண்டே இந்த சிறந்த பிரதேச செயலகங்கள் தரப்படுத்தப்படுகின்றன.
அதாவது, தயாரிப்பு (Right Product), தரம் (Right Quantity), நேரம் (Right time), இடம் (Right Place), செலவு (Right Cost), நிபந்தனைகள் (Right Condition), தகவல் அறியும் உரிமை (Right Information) என்பவற்றின் சிறப்பை வைத்தே இவை கணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
20 minute ago
29 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
29 minute ago
41 minute ago