2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2018 ஜூலை 22 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட் 

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சமலங்குளம் பகுதியில்  ஆணொருவரின் சடலம், இன்று (22) மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான குச்சவெளி வடலிக்குளம்  பகுதியைச் சேர்ந்த ஏ.எல்.முஹம்மட் அஸாம் (வயது 26) எனவும், மிருக வேட்டைக்காக இவர் கொண்டுசென்ற காட்டுத்துவக்கு வெடித்தமையால் இவர் உயிரிழந்திருக்கலாம் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குச்சவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X