2025 ஜூலை 26, சனிக்கிழமை

ஆறாவது ஆண்டு சித்திரக்கண்காட்சி

Thipaan   / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம், எஸ்.சசிக்குமார்

திருகோணமலை சித்திரக் கலைக்கூடத்தின் ஆறாவது ஆண்டு சித்திரக்கண்காட்சி, திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் சம்பந்தர் மண்டபத்தில், இன்று (22)  காலை  ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியகத்தின்  பணிப்பாளர் எஸ். வரதசீலன் கலந்துகொண்டு, இக்கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

இரண்டாவது நாளாக, நாளையும் நடைபெறும் இக்கண்காட்சியில் மாவட்ட செயலாளர் என்.புஸ்பகுமார கலந்து கொண்டு, வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி வைப்பார் என, இதன்பணிப்பாளர் அ. அருள்பாஸ்கரன் தெரிவித்தார்.

இக்கண்காட்சியில், ஆரம்பப் பாடசாலை தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கல்விபயிலும்ஈ மாணவர்கள் 256 பேரின் 620 ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனவெனவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X