2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆறு வயது பிக்கு துஷ்பிரயோகம்: பிக்குகள் இருவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஜூன் 16 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாய் 98ஆம் கொலனியிலுள்ள பௌத்த விகாரையொன்றில், ஆறு வயதுடைய பௌத்த பிக்குவொருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பௌத்த பிக்குகள் இருவரை, இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் தம்மிக்க பெரேரா, செவ்வாய்க்கிழமை (14) உத்தரவிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த 39 மற்றும் 17 வயதுடைய இரு பௌத்த பிக்குகளே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தன்னைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக, ஆறு வயதுடைய பௌத்த பிக்கு, பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, பெற்றோர், தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய, பிக்குகள் இருவரையும், செவ்வாய்க்கிழமை (14) காலையில் கைது செய்த பொலிஸார், அன்றைய தினமே கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.

பாதிக்கப்பட்ட ஆறு வயதான பிக்கு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக தம்பலகமம் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X