2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஆளுநரின் தலைமையில் 90 நாட்களுக்கான வேலைத்திட்டம்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஒக்டோபர் 02 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் 90 நாட்களுக்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாக தெரிவித்தார்.

 

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதையடுத்து, கிழக்கு மாகாண நிர்வாகப் பொறுப்புகளைப் பெற்ற ஆளுநர், பிரதம செயலாளர் செயலகத்தில் இன்று (02) நடைபெற்ற கூட்டத்தின் போதே, இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்களுக்காக அமைச்சரவைக் குழு செயற்பட்டதைப்போல, அதற்குப் பதிலாக செயலாளர் குழு செயற்படும் எனவும், ஒரு வாரத்துக்கொரு முறை சந்திப்பு இடம்பெற்று, அபிவிருத்திகள் குறித்து கவனிக்கப்படுமெனவும் ஆளுநர் தெரிவித்தார்.

அத்துடன், நேற்று முதல் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இத்திட்டம் செயற்படுத்தப்படள்ளதாகவும், இன ரீதியான பாகுபாடின்றி மக்களுக்குச் சேவை செய்வதே இத்திட்டத்தின் நோக்கமெனவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அபிவிருத்தித் திட்டங்களை மக்களுடன் தொடர்புபடுத்துவதற்கு, அதிகாரியொருவரை நியமிக்கவுள்ளாரெனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X