2025 ஜூன் 12, வியாழக்கிழமை

இடம்மாற்றப்பட்ட வைத்தியரை புல்மோட்டை வைத்தியசாலைக்கே நியமிக்குமாறு பணிப்புரை

Thipaan   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

புல்மோட்டை தள வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக இருந்த எஸ். சுதாகரனை, புல்மோட்டை வைத்தியசாலையிலேயே நியமிக்குமாறும், புல்மோட்டை வைத்தியசாலைக்கு தற்போது நியமித்துள்ள பெண் வைத்தியரை பதவிஸ்ரீபுர வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் குறிப்பிட்டார்.

புல்மோட்டை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி எஸ். சுதாகரன், பதவி ஸ்ரீபுர வைத்தியசாலைக்கு தற்காலிகமாக இடம்மாற்றப்பட்டார்.

இவ்விடயம் தொடர்பாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தலைமையில் புல்மோட்டை பெரியபள்ளிவாசல் தலைவர் எம். கலீல் லெப்பை, புல்மோட்டை வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்க செயலாளர் அன்சார் மற்றும் முஸம்மில் உட்பட பலரும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவை இன்று (10) சந்தித்து பேசினர்.

இதன்  அடிப்படையில் கிழக்கு மாகாண ஆளுனர், சுகாதார அமைச்சர் ஏ.எல்.நசீருடன் தொலைபேசியில் பேசியதுடன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கருணாகருடனும் தொலைபேசியில் பேசி, குறித்த வைத்தியரை புல்மோட்டை வைத்தியசாலைக்கே மாற்றுமாறு பணிப்புரை விடுத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13