2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், எப்.முபாரக்

மூதூர் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறுகோரி, மூதூர் பிரதேச சமூக அமைப்புகளும், மூதூர் பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து, மூதூர் பிரதான வீதியில், இன்று (25) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மூதூர் பிரதேச செயலாளராக இருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள ஏ.தாஹீர், தனது சேவைக் காலத்தில், இன, மத பேதங்களுக்கு அப்பால் சிறப்பாகச் செயற்பட்டவர் எனத் தெரிவித்ததோடு, மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களின் போது, துரிதமாகச் செயற்பட்டு மக்களுக்குச் சேவை செய்தவர் என்றும் குறிப்பிட்டார்.

எனவே, இவ்வாறு மக்களோடு மக்களாக இருந்து சேவை செய்த இவரது இடமாற்றத்தை இரத்துச் செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .