Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
பி.எம்.எம்.ஏ.காதர் / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
“திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்குக் கொடுப்பதைத் தடைசெய்ய வேண்டும் என்பதற்காக விடுதலைப் போராட்டம் என்ற பெயரிலே இருந்த தமிழ் இஞைர்களை, இந்தியாவுக்கு எடுத்து அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சி கொடுத்து, கிழக்கிலங்கையிலே வாழ்கின்ற மக்களையும் நாட்டையும் அரசியல் ரீதியாக சீர்குலைப்பதற்கான திட்டத்தை, இந்தியா தீட்டியதை நாம் மறந்த விடமுடியாது” என, தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மறைவின் 17ஆம் ஆண்டு நிறைவையொட்டி, தேசிய காங்கிரஸ் ஏற்பாடு செய்த “அஷ்ரப் நினைவு நாள்” நிகழ்வு, மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நேற்று (16) இரவு நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன வந்து இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை எப்போது மாற்றினாரோ அன்று அரிசயல் கட்சிகளுக்குப் பலம் கிடைத்தது. அந்த யாப்பு மாற்றத்தின் பின்புதான் அந்த ஜே.ஆர்.ஜயவர்த்னவின் காலத்தில்தான் இந்தக் கட்சிகளுக்கான அதிகாரங்கள் கிடைத்தபொழுது, தமிழர்கள் ஒரு புறமும் விடுதலைப் போராட்டம் என்று அழுத்தங்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
“அப்பொழுதான் இந்தியாவும், அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்தது கிழக்கிலங்கையிலே இருக்கின்ற நமது திருகோணமலை துறைமுகத்தை தங்களுக்குத் தரும்படி, அமெரிக்கா ஜே.ஆர்.ஜயவர்த்தனவிடம் கேட்டபொழுது, அமெரிக்கா கேட்கிறது கொடுப்போம் என்ற உணர்வோடு கொடுக்கப்போகின்ற பொழுதுதான், இந்தியாவுடைய இந்திரா காந்தி, நீங்கள் அமெரிக்காவுக்குக் கொடுக்கக் கூடாது, இந்தியாவுக்குத்தான் தரவேண்டும் என்று அழுத்தங்களை கொடுத்தார்.
“அப்படியான அந்த சூழ்நிலைகளை சில ஞாபகப்படுத்தலுக்காக் கொண்டு வருகின்றேன். இந்த சூழ்நிலைகளின் அழுத்தங்கள் வந்த பொழுது, இந்தியா கிழக்கிலங்கையிலே வாழ்கின்ற மக்களையும், நாட்டையும் அரசியல் ரீதியாக சீர்குலைப்பதற்கான திட்டத்தை இந்தியா தீட்டியதை நாம் மறந்த விடமுடியாது. இதை நமது படித்தவர்கள் பட்டம் பெற்றவர்கள், சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள்கூட இன்னும் சிந்திக்கவில்லை.
“மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடைய கனவிலே அவருடைய அக்காட்சியிலே அவருடைய நெஞ்சுக்கு நெருக்கமாக இந்த மருதமுனை மண்ணும் இருந்திருக்கிறது. அவருடைய வரலாற்றுக் காலங்களிலே அவரோடு கொண்ட உறவுகளால் அவரோடு கொண்ட நட்பால், சமூகத்தோடு கொண்ட அக்கறையால் என்னோடும் என்னுடைய நெஞ்சத்தோடும் நெருக்கமாக எப்பொழுதுமே இருக்கின்றவர்கள் மருதமுனை மக்கள்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
3 hours ago
4 hours ago
8 hours ago