Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 ஜூலை 21 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தானியகம பகுதியிலுள்ள புத்தர் சிலையொன்று, நேற்றிரவு (20) இனந்தெரியாத சிலரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1989ஆம் ஆண்டு வைக்கப்பட்ட இந்த புத்தர் சிலையின் தலை உடைக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தானியகம பகுதியிலுள்ள இந்த புத்தர் சிலை நீண்டகாலமாக கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்டதாகவும் அப்பகுதியில் ஒரிரு நாட்களுக்கு முன்னர் பாடசாலை மாணவர்கள் சுற்றுலா வந்து அப்பகுதியில் உணவுகளை உண்டதாகவும் குரங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் குரங்குகளின் அட்டகாசத்தால் இந்த சிலை உடைந்திருக்கலாம் எனவும் சீனக்குடா பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், திருகோணமலையில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் நோக்கில் வேண்டுமென்றே இச்செயலை சிலர் செய்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தர் சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் குழுக்களை அமைத்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்துக்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
49 minute ago
58 minute ago
1 hours ago