2025 மே 14, புதன்கிழமை

இன்ஜின்களை வைத்திருந்த இருவர் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மீன்பிடி இன்ஜின்கள் இரண்டை, கெப் வாகனமொன்றில் திருடிச்சென்ற இருவர், திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி, வெறுகல் பாலத்துக்கு அருகில் வைத்து, இன்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் மேலும் இருவர் தப்பியோடியுள்ளனரெனவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

 

சந்தேகத்துக்கிடமான வாகனங்களைச் சோதனைக்குட்படுத்திய போதே, கெப் வாகனத்திலிருந்து இந்த மீன்பிடி இன்ஜின்கள்  2 கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கெப் வாகனத்தை நிறுத்தி போது, நான்கு பேர் வாகனத்துக்குள் இருந்ததாகவும் இன்ஜின்கள் பற்றிய விவரங்களை பொலிஸார் கேட்ட போது, இருவர் தப்பியோடியதாகவும் வாகனத்தின் சாரதியும் உதவியாளரும் கைதுசெய்யப்பட்டதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

ஹம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 46, 25 வயதுடைய இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் தப்பியோடியவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X