Thipaan / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா, எப்.முபாரக்
திருகோணமலை, இறக்ககண்டி கடற்கரைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகளில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் நான்கைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரை, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வானந்த பெர்ணான்டோ, நேற்றுத் திங்கட்கிழமை (10) உத்தரவிட்டார்.
நிலாவெளி, இறக்கக்கண்டி, குச்சவெளி, ஹொரவ்பொத்தான பகுதிகளைச் சேர்ந்தவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும், இறக்கக்கண்டி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் பொருத்தப்பட்டிருந்த இன்ஜின்களை திருடியதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குச்சவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி உதேன செனவிரத்ன தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு மூவரையும் கைது செய்ததுடன், விற்பனை செய்யப்பட்டிருந்த படகு இயந்திரங்களையும் கைப்பற்றினர்.
கைதுசெய்யப்பட்ட மூவரையும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்ட்டது.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026