Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 ஜூலை 16 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, வில்பனாக்குளம் பகுதியில், இராணுவ பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (15) இடம்பெற்ற இவ்விபத்தில், மொறவெவ பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சாரதியான திருகோணமலை, கோமரங்கடவெல பகுதியைச்சேர்ந்த ஜி.றுபித் குணரத்ன (37 வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,
தாவுல்வௌ இராணுவ முகாமுக்குச் சொந்தமான பஸ் அப்பகுதியிலிருந்து வந்ததாகவும் மொறவெவயிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிளுடன் வில்பனாக்குளம் பகுதியில் இராணுவத்துக்கு சொந்தமான பஸ் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
விபத்து ஏற்பட்டு மோட்டார் சைக்கிள் சாரதி விழுந்த நிலையிலும் கூட இராணுவத்தினர் பஸ்ஸை நிறுத்த வில்லையெனவும் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .