Suganthini Ratnam / 2016 மார்ச் 16 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்டத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ள இருவேறு விபத்துகளில் ஏழு பேர் காயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூதூர்ப் பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் லொறியை முந்திச்செல்ல முற்பட்டபோது சீனக்குடாப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது.
இதன்போது, மஹாமாயபுர பகுதியைச் சேர்ந்த குறித்த பஸ் சாரதியான சமீர சந்தன (வயது 35), பஸ்ஸில் பயணித்த இறக்கக்கண்டிப் பிரதேசத்தைச் ஏ.இம்தியாஸ் (வயது 31), மூதூரைச் சேர்ந்த சாரா பீவி (வயது 45) ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, லொறியில் பயணித்த செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் சசிரூபன் (வயது 30), புஸ்பராசா (வயது 20) மகேந்திரன் (வயது 23) ஆகியோரும் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறிருக்க, திருகோணமலை பஸ் நிலையத்தில் இ.போ.ச. பஸ் ஒன்று ஒருவர் மீது மோதியதில் காயமடைந்துள்ளார்.
கோணேசபுரிப் பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் முருகையா (வயது 50) என்பவரே காயமடைந்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் செல்வதற்காக பஸ் நிலையத்துக்கு வந்த மேற்படி நபரை மோதியதாக தெரியவருகின்றது.
இந்த விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
10 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago