2025 மே 14, புதன்கிழமை

இரண்டாவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு

அப்துல்சலாம் யாசீம்   / 2017 செப்டெம்பர் 08 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

"கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் இரண்டாவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு, எதிர்வரும் 13ஆம் 14ஆம் திகதிகளில், கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் நடைபெறவுள்ளது என்று" வளாக முதல்வர் டொக்டர் வீ.கனகசிங்கம் தெரிவித்தார்.

"இன்று எம்மிடையே காணப்படும் வளங்களை நாளைய நலனிற்காக பயன்படுத்தல்" எனும் தொனிப்பொருளில் இடம் பெறவுள்ள சர்வதேச மாநாடு பற்றி ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு, இன்று (08) பிற்பகல் 2.00மணியளவில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் , "இன்று எம்மிடையே காணப்படும் வளங்களை நாளைய நலனுக்காக பயன்படுத்தல்' எனும்தொனிப்பொருளில் அனைவரது மனதிலும் வளங்களின் முக்கியத்துவம் பற்றிய அறிவை மேம்படுத்தும் வகையில் கிழக்குப் பல்கலைக்கழக திருமலை வளாகத்தின் இரண்டாவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போஹொல்லாகமவும்  சிறப்பு அதிதியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டீ சில்வா மற்றும் கௌரவ விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் தம்பிமுத்து ஜெயசிங்கம்  ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இதில் விஞ்ஞானமும் தொழிநுட்பவியலும், மருத்துவம் மற்றும் சுகாதார பராமரிப்பு விஞ்ஞானம், விவசாயம் மற்றும் சுற்றாடல் அறிவியல், சமகால முகாமைத்துவம், பொருளாதார மற்றும் சர்வதேச விவகாரங்கள், தொடர்பாடல் மற்றும் அழகியல், மொழி, மொழியியல் மற்றும் இலக்கியம், சமூக விஞ்ஞானம், சுற்றுலா மற்றும் கலாச்சார பாரம்பரியம், கல்வி மற்றும் உயர்கல்வி, ஆட்சி மற்றும் குடியுரிமை எனும் பிரதான தலைப்புக்களை முதன்மைப்படுத்தி ஆய்வுக் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

அத்துடன், சமகால பட்டதாரிகள் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவர்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய வேலைவாய்ப்புக்கள் என்ற ஆய்வுப்பொருளில் அறிவியல் கலந்துரையாடலொன்றும் இடம்பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X