2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

இரவில் நடமாடும் யானைகள் தொடர்பில் விசனம்

Thipaan   / 2016 நவம்பர் 08 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மணியரசங் குளத்தை அன்டிய பகுதியில், காட்டு யானைகளின் நடமாட்டம் இரவில் அதிகரித்துள்ளதாகவும் இப்பகுதியூடாகப் பயணிப்போர் மாலை 05 மணிக்கு பின்னர் இவ்வீதியை தவிர்க்குமாறும்  அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா, மணியரசன் குளத்தின் ஊடாக ஆயிலியடி, வான் எல, முள்ளிபொத்தானை ஆகிய வீதிகளை பயன்படுத்துபவர்கள் இரவாவதற்கு முன்பு பயணத்தை முடித்துக் கொள்ளுங்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அச்சத்துடனேயே காலத்தை கழிக்க வேண்டியுள்ளதாகவும் பிள்ளைகள் பயத்துடனும் உளரீதியாகவும் பாதிப்புக்குள்ளாவதாகவும் மேலும் மக்கள் தெரிவிக்கின்றனர்

இரண்டு உயிர்கள் இவ்வருடத்துக்குள் காட்டு யானைகளினால் பறிபோயுள்ளதாகத் தெரிவித்த மக்கள், வீதி விளக்குகள், யானை வேலிகள் என்பவற்றை அமைத்து, தமது பிரச்சனையை தீர்க்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X