2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இரு இளைஞருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத். 

திருகோணமலை, உட்புவெளிப் பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்  கைது செய்யப்பட்ட 24  வயதுடைய இளைஞர்கள் இருவரையும்,  இம்மாதம் 17 ஆம்  திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சுபாசினி இன்று (15) உத்தரவிட்டார்

இந்த சம்பவத்தில், திருகோணமலை தேவா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த நபரிடமிருந்து 3ஆயிரம் மில்லிகிராம் கேரளா கஞ்சாவும், திருகோணமலை வரோதயா நகரத்தைச் சேர்ந்த நபரிடமிருந்து 2ஆயிரம் மில்லிகிராம் கேரளா கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களை திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று (14) மாலை  கைது செய்து, நீதிமன்றத்தில் இன்று (15) முன்னிலைப்படுத்தியப்போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X