Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 27 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், சிம் அட்டை வியாபார முகவர்களின் இரு குடும்பங்கள், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனவென, சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஏம்.ஏ.அஜித், இன்று (27) தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கிண்ணியா பைசல் நகர், ரஹ்மானியா நகர் ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள இரு குடும்பங்களே, இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன.
“கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரின் உத்தரவுக்கு அமையவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
“மேற்படி இரு சிம் அட்டை வியாபார முகவர்களும், திருகோணமலை குரங்கு பாலம் இராணுவப் படைத்தளத்தளத்தில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளவர்களுக்கு இம்மாதம் 20ஆம் திகதி சிம் அட்டைகளை விற்பனை செய்யச் சென்றுள்ளார்கள்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025