2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இலஞ்சம் பெற்ற உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.கீத்

திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட  பகுதியில் 8,500 ரூபாய் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தரை, இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை பிரதம நீதவான் எம். எச். எம்.ஹம்ஸா, இன்று (10) உத்தரவிட்டார்.

சமுர்த்தி உரித்துப் பத்திரம் வழங்குவதாகக் கூறி, இரு பயனாளிகளிடம் பணத்தை வாங்கும்போது, இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவிரால் மேற்படி உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

குச்சவெளி - காசிம் நகர் பகுதியைச் சேர்ந்த சமுர்த்திப் பயனாளிகள் செய்த முறைப்பாட்டையடுத்து, இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குச்சவெளி பிரதேச  செயலகத்துக்கு வருகை தந்ததாகவும் சமுர்த்திப் பயனாளிகள் அலைபேசி மூலம் சமுர்த்தி உத்தியோகத்தரை வரவழைத்துப் பணத்தைக் கொடுக்கும் போது, கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .