2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்வு

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும்,  பயனாளிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்வு நேற்று மீரா நகர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றபோது, மின் இணைப்புக்கான கட்டணம் செலுத்தப்பட்ட பத்திரங்களை, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் வழங்கி வைத்தார்.

மின்சாரமின்றி இருளில் வாழ்ந்து வந்த சுமார் 45 தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூபின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் அலி, ஆர்.எம்.றஜீன், கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட், தம்பலகாம பிரதேச சபை முன்னாள் தவிசாளர் வாகிட், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் உட்பட பயனாளிகள்   எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .