Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மே 17 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா, ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, மூதூர் அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி காலை 08 மணி தொடக்கம் மாலை 04 மணிவரை அனைத்து நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்தார்.
சுகாதார சுதேச வைத்தியத்துறைப் பிரதி அமைச்சர் பைசல் காசீம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர், சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர் மற்றும் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த வைத்திய முகாமில் 500 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கப்படவுள்ளதாகவும் மூதூர், தோப்பூர், சம்பூர், கிளிவெட்டி மற்றும் சேனையூர் பிரதேச மக்களையும் தவறாது கலந்துகொண்டு இலவச சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago