2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இளைஞனுக்கு விளக்கமறியல்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவத்துடன்  தொடர்புடைய சந்தேகநபரை,   இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, இன்று (06)  உத்தரவிட்டார்.

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவை உடைத்து, அதற்குள் இருந்த பணப்பையைத் திருடியதுடன், வங்கி வரவு அட்டையையும் திருடி, அதன்மூலம் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை மீளப் பெற்றுக்கொண்டார் என குறித்த நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

திருகோணமலை 03ஆம் கட்டை சோலையடி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X