2025 மே 19, திங்கட்கிழமை

இளைஞனைத் தேடும் பணிகள் மும்மூரம்

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.கீத்

திருகோணமலை- மாவிலாறு குளத்துக்கு நீராடச் சென்ற இளைஞர் ஒருவர், நேற்று (29) மாலை காணாமல் போயுள்ள நிலையில், அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியைச் சேர்ந்த மனோகரகாந்தன் சஜீவன் (22 வயது) எனும் இளைஞனே, இவ்வாறு காணாமல் போயுள்ளார்.  

திருகோணமலை நகர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 07 பேர், மாவிலாறு குளத்தில் குளித்துக் கொண்டிருந்த வேளை, அவர்களுடன் சென்ற ஒருவரைக் காணவில்லை எனவும், அவரை முதலை இழுத்துச் சென்றதா அல்லது நீரில் மூழ்கி அவர் காணாமல் போயுள்ளாரா என்பது பற்றிய விவரம் தெரியவில்லை எனவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞரைத் தேடும் பணியில் கடற்படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X