Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு இளைஞர் சேவைகள் அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் எஸ். ரவிக்குமார் , 28 வேலைத்திட்டங்களை திருகோணமலை மாவட்டத்தில் வழங்கியுள்ளதாகவும், ஒரு திட்டத்துக்கு மூன்று இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவு படுத்தும் கலந்துரையாடல் இன்று (22) திருகோணமலையில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் , அவர் கருத்து தெரிவிக்கையில் : திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 248 கழகங்களை பதிவு செய்துள்ளதாகவும் எதிர்காலத்தில் பிரதேச மட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளையும் - இன ஐக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் பல நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான கிளிவெட்டி பிரதேசத்தில் இளைஞர் கழகங்களின் ஊடாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்டத்திற்கு சென்றமை எமக்கு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்துவதாகும், பிரதேச மட்டங்களில் அதிக அளவிலான வீரர்கள் மறைந்து காணப்படுவதாகவும் எதிர்காலத்தில் அவர்களை தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
45 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
53 minute ago