Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
மூதூர் வேதந்தீவு கிராம மக்கள் இழுவைப் பாதையூடாக பயணிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதால் இதற்கு, நிரந்தரத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென தெரிவித்த மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் பீ.டி.எம்.பைஸர்,மூதூர் பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்விலேயே இதனை தெரிவித்தார்.
மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.அரூஸ் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வில் அவர்தொடர்ந்தும் உரையாற்றுகையில்:வேதந்தீவு கிராமத்திலிருந்து மூதூர் நகர் பகுதிக்குச் செல்ல வேண்டுமாக இருந்தால், வேதந்தீவு களப்பு கடலுக்கு மேலால் போடப்பட்டுள்ள இழுவைப் படகு மூலமாகவே செல்ல வேண்டியுள்ளது. அத்தோடு மூதூர் நகர் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு அவசர நோயாளர்களை கொண்டு செல்வதிலும் இவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர் நோக்குவதாகவும் தெரிவித்த அவர், மறு திசையில் இழுவைப் பாதை இருக்குமாக இருந்தால் அங்கிருந்துயாராவது அதனை இழுத்து வரும் வரை மறு திசையிலு ள்ளோர் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார். இது விடயமாக பலரும் வாக்குறுதி வழங்கியும் இன்னும் நிறைவேற்றப்படாததையிட்டு அப்பிரதேச வட்டார உறுப்பினர் என்ற வகையில் கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் இது விடயம் குறித்து மூதூர் பிரதேச சபை உரிய கவனம் செலுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
45 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
53 minute ago