2026 மார்ச் 23, திங்கட்கிழமை

உடும்பு இறைச்சியுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 மார்ச் 07 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, கிபுல்பெட்டியாவப் பகுதியில்  ஒரு கிலோ 800 கிராம் உடும்பு இறைச்சியை வைத்திருந்ததாகக் கூறப்படும்; 54 வயதுடைய ஒருவரை இன்று திங்கட்கிழமை காலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், உடும்பு இறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், இச்சந்தேக நபரையும் மறித்துச்  சோதனையிட்டனர். இதன்போது அவரிடம் உடும்பு இறைச்சி இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .