2025 மே 14, புதன்கிழமை

‘உணவு முத்திரை வழங்கப்பட வேண்டும்’

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் கிழக்கு, சம்பூர் போன்ற மீள்குடியேற்ற மக்களுக்கு, சமுர்த்தி உணவு முத்திரை வழங்கப் பட வேண்டுமென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கோரிக்கை விடுத்தார்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், நேற்று முன்தினம் நடைபெற்ற போது, இப்பிரச்சினையை முன்னிலைப் படுத்தி அவர் கருத்து தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

சம்பூர், சேனையூர் உள்ளிட்ட மூதூர் கிழக்கு மக்கள் கடந்த உள்நாட்டுப் போர் காலத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தனர். இதனால் இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணம் அவர்களுக்கு வழங்கப் பட்டது. ஒரே நேரத்தில் இரு கொடுப்பனவுகள் வழங்க முடியாது என்ற காரணத்துக்காக அவர்கள் பெற்ற சமுர்த்தி முத்திரை மீள பெறப்பட்டது.

இப்போது அம்மக்கள் மீளக் குடியேறி இருக்கிறார்கள். இதனால் இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணம் நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது, இம்மக்களுக்கு சமுர்த்தியும் இல்லை, வேறு நிவாரணமும் இல்லை. இதனால் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

எனவே, தற்போதைய சமுர்த்தி பயனாளிகளைக் குறைக்காது மேலதிக சமுர்த்தி முத்திரைகள் பெற்று  இம்மக்களுக்கு அவை வழங்கப்பட வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X